My link to facebook

Welcome to my blog

Friday, July 22, 2011

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சபீதா ஜோசப் எழுதிய மருந்திலா மருத்துவ குறிப்புகள் :

தேங்காய் நாரை பற்ற வைத்து அதில் வரும் புகையை மூக்கில் பிடிக்க மூக்கிலிருந்து நீர் வருவது நின்று போகும்.

வென்னீரில் வேம்பு இலையை போட்டு குளித்தால் சொறி சிரங்கு அலர்ஜி ஆகியவை சரியாகும்.

கஸ்துரி மஞ்சளை அரைத்து தடவி வந்தால் பருக்கள் மறைந்து போகும்.

எலுமிச்சை சாற்றுடன் சம அளவு துளசி சாற்று கலந்து தடவி வந்தால் முகத்தில் உள்ள தேமல்கள் மறையும்.

காது அடைப்பை நீக்க சிறிது அளவு சுக்கை காதில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

வாரம் ஒரு முறை ஒரு முடி தேங்காயில் பாலெடுத்து தலையில் மயிர் காலில் படும் படி நன்றாக தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலை முடி கொட்டாது.

காய்ந்த வேப்பிலையை ஒரு துணியில் சுருட்டி தனியாமூட்டையில் வைக்க வண்டு வராது .

தீப்புண்களுக்கு முள்ளங்கி அரைத்து போட்டால் நீர் வடிவது நின்று விடும். உள் காயங்களும் ஆறிவிடும்.

Thursday, February 10, 2011

த்யானலிங்கத்தின் நாள் பலன்கள்:

திங்கள்: நில தத்துவம்: உடல் நலம் பெற, நீண்ட நாள் நோய்கள் நீங்க, மக்கள் பேறு பெற.

செவ்வாய்: நீர் தத்துவம்: கணவன், மனைவி உறவு மேம்பட, தாம்பத்திய உறவு பிரச்சினைகள் நீங்க.

புதன்: நெருப்பு தத்துவம்: பொருளாதார மேம்பாடு பெற, கடன் தொல்லைகள் நீங்க.

வியாழன்: காற்று தத்துவம்: கர்ம வினை அகல, அன்பு வழி மேம்பட.

வெள்ளி: வான தத்துவம்: சாபம் நீங்க, செய்வினை, ஏவல் நீங்க. கண் திருஷ்டி அகல

சனி: மகா தத்துவம்: மாயை விலக தன்னை அறிய.

ஞாயிறு: ஞான தத்துவம்: அகந்தை நீங்க, குரு அருள் பெற.

இந்த தகவல்கள் கோவை ஈஷா அற நிலையத்தில் உள்ள த்யானலிங்க பலன்கள் பற்றி சத்குரு சொல்லியிருப்பது. இந்த பலன்களை முழுமையாக அனுபவத்தில் உணர தக்க பயிற்ச்சியும் த்யானமும் இன்றி அமையாதது.

Wednesday, January 26, 2011

இந்த இடுக்கை தினத்தந்தி ஆன்மிகம் இணைப்பிலிருந்து எடுக்க பட்டது.

விளக்கு எரிக்க பயன் படுத்த படும் எண்ணை வகைகள்ளின் பயன்கள்.

கிழக்கு திசையில் மட்டும் தீபம் ஏற்றினால் நன்மைகள் தொடரும்.
மேற்கு திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்கள் இடையே ஒற்றுமை ஏற்படும். கடன் தொல்லைகள் விலகும்.
வடக்கு திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சர்வமங்களுமும் பெரும் செல்வமும் ஏற்படும்.
எக்காரணத்தை கொண்டும் தெற்கு திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்ற கூடாது. இல்லை எனில் எதிர்பாரத தொல்லைகளும் பாவங்களும் வந்து சேரும்.