கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சபீதா ஜோசப் எழுதிய மருந்திலா மருத்துவ குறிப்புகள் :
தேங்காய் நாரை பற்ற வைத்து அதில் வரும் புகையை மூக்கில் பிடிக்க மூக்கிலிருந்து நீர் வருவது நின்று போகும்.
வென்னீரில் வேம்பு இலையை போட்டு குளித்தால் சொறி சிரங்கு அலர்ஜி ஆகியவை சரியாகும்.
கஸ்துரி மஞ்சளை அரைத்து தடவி வந்தால் பருக்கள் மறைந்து போகும்.
எலுமிச்சை சாற்றுடன் சம அளவு துளசி சாற்று கலந்து தடவி வந்தால் முகத்தில் உள்ள தேமல்கள் மறையும்.
காது அடைப்பை நீக்க சிறிது அளவு சுக்கை காதில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை ஒரு முடி தேங்காயில் பாலெடுத்து தலையில் மயிர் காலில் படும் படி நன்றாக தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலை முடி கொட்டாது.
காய்ந்த வேப்பிலையை ஒரு துணியில் சுருட்டி தனியாமூட்டையில் வைக்க வண்டு வராது .
தீப்புண்களுக்கு முள்ளங்கி அரைத்து போட்டால் நீர் வடிவது நின்று விடும். உள் காயங்களும் ஆறிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment