மாவிலங்க மரத்தின் உபயோகங்கள்:
மாவிலங்க இலைகளை அரைத்து பற்று போட வீக்கங்கள் கரையும்.
மாவிலங்க சாறு, தேங்காய் பால் வகைக்கு ௩௦ மிலி கலந்து கொடுத்தால் மூட்டு வலி தீரும்.
மாவிலங்க இலைகளை வாழை தண்டு சேர்த்து அரைத்து பற்று போட கொப்புள்ங்கள் குணமாகும் .
மாவிலங்க இலைகளை உலர்த்தி புகை போட மூக்கு பிணிகள் போகும்.
மாவிலங்க இலைகளை அரைத்து பற்று போட பாத எரிச்சல், பாத வலி போகும்.
மாவிலங்க பட்டையை சிதைத்து பார்லி அரிசி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டால் சிறுநீர் வியாதிகள் தீரும்.
மாவிலங்க பட்டை அசோகம் பட்டை கருங் ஜீரகம் தென்னம் பாளை சோம்பு ஆவாரம்பூ வகைக்கு நூறு கிராம் : சுக்கு, மிளகு , திப்பிலி வகைக்கு இருபத்தைந்து கிராம் : லவங்க பட்டை, கறிவேப்பிலை வகைக்கு ஐம்பது கிராம் சேர்த்து தூளாக்கி காலை மாலை இரு வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் இயல்பான நிலைக்கு திரும்பும். இதே மருந்து மாத விடை நோயகளையும் குண படுத்தும்.
மாவிலங்க பட்டை , வாதநாராயண இலை முடக்கத்தான் நொச்சி இலை சித்திரமூல வேர் பட்டை, தனியா சுக்கு மோடிகுச்சி சித்தரத்தை வகைக்கு நூறு கிராம் ஓமம் சதகுப்பை தேற்றான் கொட்டை வகைக்கு ஐம்பது கிராம் மிளகு ஏலக்காய் திப்பிலி லவங்க பட்டை பேரீச்ச்ங்காய் வகைக்கு 25 கிராம் கலந்து தூளாக்கி காலை மாலை இரு வேளையும் 2 முதல் 5 கிராம் வரை வயது படி கொடுக்க எல்லா வித வாத நோயக்ள் மூட்டு வலை பாத வலி போகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment